உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  விடுதியை மேல் வாடகைக்கு விட்டு மோசடி செய்த பெண்ணுக்கு வலை

 விடுதியை மேல் வாடகைக்கு விட்டு மோசடி செய்த பெண்ணுக்கு வலை

திருவான்மியூர்: விடுதியை மேல் வாடகைக்கு விட்டு, பணமோசடி செய்த பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். திருவான்மியூர், கிழக்கு காமராஜர் தெருவில், ஆகாஷ் என்பவரின் கட்டடம் உள்ளது. இதில், கவிதா என்பவர் பெண்கள் விடுதி நடத்தி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், முகமது சப்தெஸ், 32,என்பவரை தொடர்பு கொண்ட கவிதா, விடுதியை நடத்த கேட்டார். இதற்கு சம்மதித்த முகமது சப்தெஸ், 5 லட்சம் ரூபாய் முன்பணம் மற்றும் இரண்டு மாத வாடகையாக, 45,000 ரூபாயை கவிதாவிடம் கொடுத்தார். வெளிநாடு சென்று திரும்பிய ஆகாஷ், விடுதியில் சென்று விசாரித்தபோது, கவிதா மேல் வாடகைக்கு விட்டு பண மோசடி செய்து தெரிந்தது. முகமது சப்தெஸ் அளித்த புகாரில், திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து, கவிதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை