உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 108 ஆம்புலன்சில் பெண்ணிற்கு பிரசவம்

108 ஆம்புலன்சில் பெண்ணிற்கு பிரசவம்

மதுரவாயல்: மதுரவாயல் அருகே '108' ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணிற்கு பிரசவம் நடந்தது. மதுரவாயல், நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்தவர் ராகுல், 26. இவரது மனைவி சபர்மதி, 22; நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால், '108' ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர். சின்ன போரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நின்ற 108 ஆம்புலன்ஸ், சக்தி நகருக்கு வந்தது. பின், அதீத வலியால் துடித்த சபர்மதியை, மருத்துவ உதவியாளர் ஆனந்த் மற்றும் ஓட்டுநர் அந்தோணி ராஜ், இருவரும் ஆம்புலன்சில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பிரசவ வலி அதிகளவில் இருந்தால், அதே பகுதியில் சாலையோரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மருத்துவ உதவியாளர் வாகனத்திலேயே பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. நலமாக இருந்த தாயும், சேயும் மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களை பலதரப்பினர் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !