உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க குவியும் பெண்கள் விரட்டியடிப்பு

உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க குவியும் பெண்கள் விரட்டியடிப்பு

அண்ணா நகர், தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2024 செப்டம்பரில் துவக்கியது. இத்திட்டத்தில், உரிமை தொகை கேட்டு, 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், அரசு விதித்த நிபந்தனைகள் அடிப்படையில், 1.15 கோடிக்கும் மேல் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.விண்ணப்பிக்க தவறியவர்கள், நேற்று முன்தினம் முதல் விண்ணப்பிக்கலாம் என, இணையத்தில் தகவல்கள் வெளியானது.இதை நம்பி ஏராளமான பெண்கள், மாநகராட்சி மண்டல அலுவலகம், தாசில்தார் அலுவலகம், இ - சேவை மையங்களில் குவிகின்றனர்.அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் குவியும் பெண்களை, முறையாக அறவிப்பு வரவில்லை எனக்கூறி, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் விரட்டியடிக்கின்றனர்.இதுகுறித்து, விண்ணப்பிக்க சென்ற பயனாளி ஒருவர் கூறியதாவது:உரிமை தொகைக்கு ஜூன் 4ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கவுன்சிலர்கள் முதல் பலரும் தெரிவிக்கின்றனர்.இதை நம்பி, அண்ணா நகர் மாநகராட்சி அலுவலகம், அமைந்தகரை தாசில்தார் அலுவலகம், ரேஷன் அலுவலகம், இ - சேவை மையங்களில் சுற்றி வருகிறோம்.ஆனால் அவர்கள், தங்களுக்கு முறையாக அறிவிப்பு வரவில்லை என, மாறி மாறி அலைக்கழிக்கின்றனர். இத்திட்டத்தை குறித்து, அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை