உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கோயம்பேடு சந்தையில் பழங்கள் திருடிய பெண்கள்

 கோயம்பேடு சந்தையில் பழங்கள் திருடிய பெண்கள்

கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் மூடிய கடைகளில் இருந்த பழங்களை திருடிய பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர். கோயம்பேடு பழ சந்தைக்கு, வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் பழ வகைகள் எடுத்து வரப்படுகின்றன. காலை முதல் இரவு 11:00 மணி வரை சந்தையில் பழங்கள் விற்கப்படும். அதன் பின், கடைகளின் முன், பெட்டிகளில் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு, தார்ப்பாய் உள்ளிட்டவற்றால் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும். இந்நிலையில், கடைகள் மூடப்பட்ட பின், கடைகளில் மூடிவைக்கப்படும் பழங்கள், அடிக்கடி திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து வியாபாரிகள், கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மூன்று பெண்கள் பழங்களை திருடிச் செல்வது தெரிந்தது. இத்திருட்டு குறித்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை