உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண் சரிந்து விபத்து தொழிலாளி பலி

மண் சரிந்து விபத்து தொழிலாளி பலி

மாதவரம்:மாதவரம் ரவுண்டானா அருகில், கில்பன் நகரில் கால்வாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதற்கான பணியில், நேற்று திண்டிவனத்தைச் சேர்ந்த ஏழுமலை, 48, என்பவர் ஈடுபட்டிருந்தார்.நேற்று மதியம் மண் சரிந்து விழுந்ததில், ஏழுமலை மண்ணுக்குள் சிக்கினார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்தார். மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த ஏழுமலைக்கு வாசுகி என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை