உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணிச்சுமை ஐ.டி., ஊழியர் தற்கொலை

பணிச்சுமை ஐ.டி., ஊழியர் தற்கொலை

கொரட்டூர், கொரட்டூரைச் சேர்ந்தவர் பிரவீன், 26; ஐ.டி., ஊழியர். இவர், சில தினங்களாக பணிச்சுமை அதிகளவில் உள்ளதாக, தாயிடம் கூறி வந்துள்ளார்.வழக்கம் போல், இரவு பணி முடிந்து, நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். உறங்க செல்வதாக அறைக்கு சென்ற பிரவீன், வெகு நேரமாகியும் வெளியே வராததால், தாய் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் துாக்கிட்டு பிரவீன் தற்கொலை செய்தது தெரிந்தது.கொரட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ