உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஸ்கூட்டரில் லாரி மோதி இளம்பெண் பலி

 ஸ்கூட்டரில் லாரி மோதி இளம்பெண் பலி

சென்னை: மாதவரம் அருகே லாரி மோதி, ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் பலியானார். மாதவரம் அடுத்த மாத்துாரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 31, என்பவரது மனைவி சிவரஞ்சனி, 28. இவர், நேற்று முன்தினம் இரவு அண்ணா நகரில் இருந்து, ஸ்கூட்டரில் வீட்டிற்கு கிளம்பினார். மஞ்சம்பாக்கம் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி, சிவரஞ்சனி ஸ்கூட்டரில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவரஞ்சனி உடலை கைப்பற்றிய செங்குன்றம் போலீசார், விபத்து ஏற்படுத்திய நாகப்பட்டினம் மாவட்டம், கீழ வேலுார் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ