மேலும் செய்திகள்
12க்கும் மேற்பட்ட பெண்களிடம் மூன்று மாதங்களில் மோசடி
2 minutes ago
ரவுடியை கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு
4 minutes ago
கிரைம் கார்னர் - டி.சி.,
5 minutes ago
ஓசியில் பிரியாணி தராத கடைகாரருக்கு கத்திக்குத்து
5 minutes ago
தாம்பரம்: திருமண செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி, டெபிட் கார்டு பெற்று, 9.80 லட்சம் ரூபாயை சுருட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துாரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் 28 வயது மகள், பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். திருமணம் செய்து வைக்க பெற்றோர் வரன் தேடினர். மேட்ரிமோனி தகவல் வாயிலாக, 30 வயது வாலிபர் பேசியுள்ளார். 'சென்னையில் வசிக்கிறேன். 'நிக்ஸ் குரூப்' என்ற நிறுவனத்தை, துபாய் மற்றும் சென்னையில் நடத்தி வருகிறேன்' என கூறியுள்ளார். பெண்ணின் பெற்றோரை சம்மதிக்க வைத்து, மொபைல் போன் மூலம் பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இருவரும் இரண்டு முறை சந்தித்தாக கூறப்படுகிறது. தன் நிறுவனத்தின் பண பரிவர்த்தனையை, வருமான வரித்துறை முடக்கி விட்டதால், பணம் கொடுத்து உதவுமாறு வாலிபர் கேட்டுள்ளார். பின், அப்பெண்ணின் டெபிட் கார்டை வாங்கி, அதன்மூலம் சிறுகச் சிறுக, 9.80 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும், வாலிபர் கூறிய முகவரிக்கு சென்றபோது, அவர் அங்கு வசிக்காதது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டத்தை அறிந்த அப்பெண், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் எண், இன்ஸ்டாகிராம் முகவரி ஆகியவற்றை கொண்டு விசாரித்தனர். மேற்கு தாம்பரம், கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த கோபிநாத், 30; என்பரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
2 minutes ago
4 minutes ago
5 minutes ago
5 minutes ago