உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் மேல் ஏறிய வாலிபர் மின்சாரம் பாய்ந்து படுகாயம்

ரயில் மேல் ஏறிய வாலிபர் மின்சாரம் பாய்ந்து படுகாயம்

தாம்பரம், தாம்பரம் அருகே, வேலை தேடி சென்னைக்கு வந்த வாலிபர், ரயில் மேல் ஏறிய போது, மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிபின், 23. பொறியியல் பட்டதாரி. இவர், வேலை தேடி, அந்தியோதயா விரைவு ரயிலில், நேற்று காலை சென்னை வந்தார். இரும்புலியூர் - தாம்பரம் இடையே வந்த போது, தற்கொலை செய்யும் முடிவில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்பதற்காக மெதுவாக சென்றுகொண்டிருந்த ரயிலின் மேற் பகுதிக்கு ஏறினார். அப்போது, மேலே சென்ற உயரழுத்த மின்சாரம் பாய்ந்து, பலத்த தீக்காயம் அடைந்து, துடித்தபடியே ரயில் மீது விழுந்து கிடந்தார். ரயில் தாம்பரத்திற்கு வந்ததும், அவரை மீட்ட ரயில்வே போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, 80 சதவீத தீக்காயத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில், பிபின் சிகிச்சை பெற்று வருகிறார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை