உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறை பஸ்கள் ஆழியாரில் நிறுத்தாததால் பயணிகள் அவதி

வால்பாறை பஸ்கள் ஆழியாரில் நிறுத்தாததால் பயணிகள் அவதி

வால்பாறை : ஆழியாரில் பஸ் நிறுத்த அரசு போக்குவரத்துக்கழகம் திடீர் தடை விதித்துள்ளதால், வால்பாறை பயணிகள் அவதிப்படுகின்றனர்.வால்பாறை மலைப்பகுதியிலிருந்து சமவெளிப்பகுதியில் உள்ள பொள்ளாச்சிக்கு அட்டகட்டி, ஆழியாறு வழியாக 3 மணி நேரம் பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இடைப்பட்ட நேரத்தில் ஆழியாரில் பத்து நிமிடம் பஸ் நிறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் சிறுநீர் கழிக்கவும், டீ அருந்தவும் வசதியாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி செல்லும் பஸ்களும், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வரும் அரசு பஸ்களும் ஆழியாரில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் வால்பாறை பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பயணிகள் கூறியதாவது:பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வரும் பஸ்கள் அட்டகட்டியிலும், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் ஆழியாற்றிலும் நிறுத்தி சென்றால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ