| ADDED : ஜூலை 11, 2011 09:51 PM
பொள்ளாச்சி : தமிழகத்தில், சீசன் துவங்கியும் எதிர்பார்த்த மழை பொழிவு
இல்லாததால் வாழைத்தார் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி
சந்தைக்கு வரத்து குறைந்திருப்பதுடன், விலையும் ஏற்றம்
அடைந்துள்ளது.விவசாயிகள் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லாததோடு, வெயிலும்
சுட்டெரிக்க துவங்கியுள்ளது. இதனால், வாழைத்தார் விளைச்சல்
பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் பொள்ளாச்சி சந்தைக்கு வாழைத்தார் வரத்து
சரிந்துள்ளது. வார நாட்களில், ஆயிரத்து 500 வாழைத்தார் மட்டுமே வரத்தாக
உள்ளது. வரத்து சரிந்துள்ளதால், வாழைத்தார் விலை உயர்ந்து வருகிறது. கடந்த
மாதத்தை விட இம்மாதம் அனைத்து ரக வாழைத்தாரின் விலையும் 60 ரூபாய் வரை
உயர்ந்துள்ளது.நேற்றைய மார்க்கெட் விலை நிலவரம் (வாழைத்தார்
ஒன்றுக்கு):பூவன்: 100 - 200, மோரிஸ் 150 - 250, கற்பூரவல்லி - 150 -300,
செவ்வாழை - 200 - 400, ரஸ்தாளி - 200 - 350, நேந்திரம் (கிலோ) - 26 என விலை
போனது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'வாழைத்தார்
விளைச்சல் இல்லாததால், விலை உயர்ந்து வருகிறது. எதிர்பார்த்தப்படி மழை
இல்லாததால்தான் விளைச்சல் சரிந்துள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்கு
புதுக்கோட்டை சீசன் நடக்கும். மழை பொழிவு இருந்தால், வரத்து அதிகரித்து,
விலை சரியும். வரத்து குறைந்தால், விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளது'
என்றனர்.