உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ் கவிழ்ந்து 15 பயணிகள் காயம்

அரசு பஸ் கவிழ்ந்து 15 பயணிகள் காயம்

சூலூர் :சூலூரில் நேற்று அதிகாலையில் அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 5 பெண்கள் உட்பட 15 பயணிகள் காயமடைந்தனர்.திருச்சியில் இருந்து நேற்று அதிகாலை கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை கோத்தகிரியை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் (31) ஓட்டி வந்தார். அதிகாலை நேரம் என்பதால் நடத்துனர் முருகேசன் உட்பட 22 பயணிகள் பஸ்சில் தூங்கி கொண்டு வந்தனர்.பஸ் அதிகாலை 4.30 மணிக்கு சூலூர் தனியார் மருத்துவமனைக்கு அருகில் வந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது. அப்போது கட்டுப்பாடு இழந்த பஸ், எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.பஸ்சில் பயணம் செய்த சுமித்திரா, மாரியம்மாள், ரஞ்சிதா, செல்லம்மாள், பிச்சையம்மாள், டிரைவர் சிவக்குமார் உட்பட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சூலூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ