உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறு, குறு விவசாயிகளுக்கு அழைப்பு

சிறு, குறு விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குனர் அறிக்கை : சிறு, குறு விவசாயிகள் பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வேளாண் துறை சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பணியை வேளாண்துறையில் உதவி வேளாண் அலுவலர்கள் அந்தந்த பகுதியில் மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தக்க ஆவணங்களுடன் அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்கள் அனைத்தும் சரியாக கிடைக்கவும், ஆய்வுப்பணிகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தொண்டாமுத்தூர் உதவி வேளாண் அலுவலராக பழனிச்சாமி, சோலபாளையத்திற்கு ராஜன், கோலார்பட்டி மற்றும் கோமங்கலத்திற்கு அமல்ராஜ், அம்பராம்பாளையத்திற்கு சிவமூர்த்தி, சமத்தூருக்கு ராம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ