உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் ரோடு பணி பாதிப்பு

மழையால் ரோடு பணி பாதிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில், மழையால், நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வரும் ரோடு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. அடிக்கடி மழையால் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்வதால், ரோடு போட பயன்படுத்தப்படும் தார், ரோட்டில் ஒட்டாத நிலை உள்ளது. இந்த பணிகள் ஒரு வாரத்துக்குள் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை