உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வோதயா சங்கத்தில் சிறப்பு தள்ளுபடி

சர்வோதயா சங்கத்தில் சிறப்பு தள்ளுபடி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சர்வோதயா சங்கத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியது.பொள்ளாச்சி சர்வோதயா சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், வெங்கட்ரமணன் வீதியிலிருந்து ஊர்வலமாக வந்த ஊழியர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியது. விற்பனையை சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., பாலாஜி, சங்க ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், கதர், பட்டு ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கதர் ஆடைகளுக்கு 30 சதவீதமும், பட்டு ரகத்திற்கு 20 சதவீதமும், கம்பளிகளுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தள்ளுபடி விற்பனை வரும் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில், 25 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சங்க செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ