உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்., செயல்வீரர்கள் கூட்டம்

காங்., செயல்வீரர்கள் கூட்டம்

ஆனைமலை : ஆனைமலை அடுத்த கோட்டூரில் காங்., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கோட்டூர் நகர காங்., தலைவர் பாரதி தலைமை வகித்தார். கூட்டத்தில் கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில் உள்ள காமராஜர் சிலையை பராமரித்து மேல் கூரை அமைக்கவும், கோட்டூரில் உள்ள 21 வார்டுகளிலும் கமிட்டிகள் அமைக்கவும், வேட்பாளர் விருப்பப்படிவம் வழங்கி தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. புற நகர் மாவட்ட தலைவர் மனோகரன், வால்பாறை சட்டசபை தொகுதி இளைஞர் காங்., துணைத்தலைவர் தினேஷ், மாவட்ட செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், பஞ்சலிங்கம், ஜோதி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ