உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.எச்.,க்கு வந்தது 50 யூனிட் ரத்தம்

ஜி.எச்.,க்கு வந்தது 50 யூனிட் ரத்தம்

பொள்ளாச்சி : திருப்பூரில் நடந்த ரத்த தான முகாமின் மூலம் 50 யூனிட் ரத்தம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. முயற்சி அமைப்பு மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் ரத்த தான முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் பங்கஜம் கூறியதாவது:பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் முயற்சி அமைப்பில் நடந்த ரத்த தானத்தில் 50 'யூனிட்' ரத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், 'ஏ-பாசிட்டிவ்' ரத்தம் 9 யூனிட்களும், 'பி-பாசிட்டிவ்'- 8 'யூனிட்கள்', 'ஏ.பி-பாசிட்டிவ்' 5 'யூனிட்கள்', 'ஓ-பாசிட்டிவ்' 24 யூனிட்கள், 'ஏ-நெகட்டிவ்'- 2, 'ஓ-நெகட்டிவ்'- 2 யூனிட்கள் என ரத்த வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. 52க்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்கள் தானம் செய்ய முன்வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை