உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கையை... மாத்தி வெச்சோம் என்னத்தெ... சேத்தி வெச்சோம்...!

இயற்கையை... மாத்தி வெச்சோம் என்னத்தெ... சேத்தி வெச்சோம்...!

எத்தனையோ நிகழ்வுகள், இன்னும் கண்களை விட்டு அகலாது இருக்கும். அப்படியான ஒரு துயரம், சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நடந்தது.உலகமே உற்றுப் பார்த்த ஒரு கொடூரம். நீண்டநாள் நினைவில் இருந்து மறக்காது. பல இடங்களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டன. இறைவனிடம் வேண்டியது, கோடானு கோடி உள்ளங்கள்.இப்படி ஒரு வேண்டுதல், கோவையில் புலம் - தமிழ் இலக்கியப் பலகை சார்பில் நடந்த கவியரங்கிலும் எதிரொலித்தது.அவிநாசி அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணனின் இந்த இரங்கற் பா, அங்கிருந்தவர்களின் மனங்களை உருக்கியது. இனி இதுபோன்ற நிகழ்வு எங்குமே நடக்கக் கூடாது என்பது தான், அனைவரின் பிரார்த்தனையும்!இதோ அந்த இரங்கற்பா!கரை தாண்டி போகுதுவயநாட்டில் வெள்ள நீருஇமை தாண்டி பாயுதுஇரங்கல் கண் நீருகுறிஞ்சி நிலம் உருண்டுமுல்லை நிலம் சேறுதென்னகத்தின் தண்ணி தொட்டிஉடைஞ்சி செந்நீருஆடிப்பாடி பெருக்கெடுத்தாஆடிப் பெருக்காச்சிஆடிப்பெருக்கு வெள்ளத்துலஅத்தனையும் போச்சுவசதிக்கு தக்கபடிஇயற்கையை மாத்தி வெச்சோம்வருங்கால தலைமுறைக்குஎன்னத்தெ சேத்தி வச்சோம்...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்