உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் 140வது ஆண்டு விழா

அரசு மருத்துவமனையில் 140வது ஆண்டு விழா

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், 140வது ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திக் மகாராஜன் தலைமை வகித்து, வரவேற்றார். டாக்டர் கார்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், நகராட்சி கமிஷனர் அமுதா, தலைவர் மெஹரிபா பர்வீன், டாக்டர்கள் சேரலாதன், இஸ்மாயில், குருசாமி, நோட்டரி நிர்வாகி சீனிவாசன், ராம கவுடரின் உறவினர்கள் பழனிசாமி, உஷாதேவி ஆகியோர் பேசினர். இந்த மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக தேசியச் தரத் சான்று வழங்கப்பட்டது. இதை அடுத்து மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் செவிலியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. டாக்டர் சுபாஷினி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் நிர்மலா தொகுத்து வழங்கினார். தலைமை செவிலியர் கண்காணிப்பாளர்கள் அம்பிகாபதி, ஜெயந்தி மற்றும் டாக்டர்கள் மருத்துவமனை ஊழியர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை