உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை அரசு கல்லுாரியில் 1433 இடங்கள்; இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்

கோவை அரசு கல்லுாரியில் 1433 இடங்கள்; இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்

கோவை:மாநில அளவில், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்க்கைக்கான ( 2024-25) விண்ணப்ப பதிவு, இன்று முதல் துவங்கவுள்ளது என கோவை அரசு கலை கல்லுாரி முதல்வர் உலகி தெரிவித்தார். மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தாமாக விண்ணப்பிக்க முடியாதவர்கள், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகலாம். மையங்களின் முகவரிகளும் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக, 48 ரூபாயும் பதிவு கட்டணமாக 2 ரூபாய் செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை. மேலும், விபரங்களுக்கு 044-24343106 / 24342911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து, கோவை அரசு கலை கல்லுாரி உலகி கூறுகையில், '' கோவை அரசு கலை கல்லுாரியில், 23 இளநிலை படிப்புகளில், இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து, 1,433 மாணவர்களை சேர்க்கவுள்ளோம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். கல்லுாரியில் அமைந்துள்ள உதவிமையம், இன்று முதல் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை செயல்படும், '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை