உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்னணு இயந்திரத்தில் பழுது: 2 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

மின்னணு இயந்திரத்தில் பழுது: 2 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்

பெ.நா.பாளையம்;வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், இரண்டு மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, கஸ்தூரி பாளையம் தொடக்கப் பள்ளியில் பூத் எண். 17ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நேற்று மாலை 4.00 மணிக்கு திடீரென கோளாறு ஏற்பட்டது.தேர்தல் அதிகாரிகள் குறைபாட்டை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் முயற்சியில் ஈடுபட்டும் பழுதை சரி செய்ய முடியவில்லை.'பெல்' அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கூறிய அறிவுரையின்படி முயன்றும், பழுதை சரி செய்ய முடியவில்லை. பின்னர், உபரியாக வைக்கப்பட்டிருந்த இன்னொரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அதிகாரிகள் நிறுவினர்.அதிலுள்ள 'சென்சாரில்' பிரச்னை ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொள்ள, 1:20 மணி நேரம் ஆகிவிட்டது.பின்னர் வெள்ளமடை பகுதியில் உள்ள பூத்தில் இருந்து, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கொண்டு வந்து மாலை, 5.45 மணிக்கு ஓட்டுப்பதிவை துவக்கினர். பின்னர், பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஓட்டு போட காத்திருந்த, 240 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.இது குறித்து, தேர்தல் அதிகாரி கூறுகையில், 'ஓட்டு போட காத்திருந்த, அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. இயந்திரம் பழுதால், சுமார் இரண்டு மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதித்தது' என்றார்.இந்த ஓட்டு சாவடியில் பணியாற்றிய பெண் தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார். அவருக்கு பதிலாக இன்னொரு தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு, உடனடியாக பணிகள் துவக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ