உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டு எண்ணிக்கை கண்காணிக்க கோவைக்கு 2 அப்சர்வர்கள்

ஓட்டு எண்ணிக்கை கண்காணிக்க கோவைக்கு 2 அப்சர்வர்கள்

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணியை கண்காணிக்க, இரண்டு 'அப்சர்வர்'கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள், ஜூன் 4ல் எண்ணப்படுகின்றன. கோவை லோக்சபா தொகுதிக்கு ஜி.சி.டி., பொறியியல் கல்லுாரி, பொள்ளாச்சி தொகுதிக்கு மகாலிங்கம் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, சட்டசபை தொகுதிகள் வாரியாக ஓட்டுகள் எண்ணுவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிராந்திகுமார், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான டி.ஆர்.ஓ., ஷர்மிளா நேற்று ஆய்வு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் 'அப்சர்வர்'கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை லோக்சபா தொகுதியில் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கு வினோத் ராவ்; பல்லடம், சூலுார், சிங்காநல்லுார் தொகுதிகளுக்கு கிருஷ்ணா குணால் 'அப்சர்வர்'களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.* பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி சட்டசபை தொகுதிகளுக்கு அனுராக் சவுத்ரி; வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளுக்கு நிதிஷ்குமார் தாஸ் 'அப்சர்வர்'களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை