உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு விடுதிக்கான 90 சென்ட் இடம் ஒப்படைப்பு

விளையாட்டு விடுதிக்கான 90 சென்ட் இடம் ஒப்படைப்பு

கோவை;விளையாட்டு மாணவர்களுக்கான விடுதிக்கான, 90 சென்ட் இடம் விளையாட்டு துறையிடம் வழங்கப்பட்டது.கோவையில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என, சட்டப்பேரவை மானியக்கோரிக்கையில், அமைச்சர் உதயநிதி அறிவித்தார். இதற்கான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த 28ம் தேதி கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகில், விடுதி அமைப்பதற்கான இடம் தேர்வு நடந்தது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி விடுதி அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார். மொத்தம், 90 சென்ட் பரப்பில், விளையாட்டு விடுதி அமைய உள்ளது. இந்நிலையில், நேற்று கோவை மாநகராட்சியின் நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக்குழு கூட்டம் நடந்தது. இதில், விடுதி அமைய உள்ள இடம், விளையாட்டு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை