உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலையில் தேர் சக்கரத்தில் கால் சிக்கி சிறுவனுக்கு காயம்

மருதமலையில் தேர் சக்கரத்தில் கால் சிக்கி சிறுவனுக்கு காயம்

வடவள்ளி ' மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தங்கத்தேர் இழுக்கும்போது, தேரின் சக்கரத்தில் சிறுவனின் கால் சிக்கியதில், காயம் ஏற்பட்டது.முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் நாள்தோறும் மாலையில், தங்கத்தேர் இழுக்கப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், சங்ககிரியிலிருந்து, 60 பேர் பஸ் மூலம் கோவைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் நேற்று மாலை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, தங்கத்தேர் இழுத்ததால், 60 பேரூம் தேரின் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த குழுவில் வந்திருந்த, ஆரவ் என்ற 7 வயது சிறுவன், தேருக்கு மிக அருகில் நின்று கொண்டு இருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக, தங்கத்தேரின் சக்கரம் சிறுவனின் இடது காலில் ஏறியது. இதில், சிறுவனுக்கு கணுக்காலில், எலும்பு முறிந்து, காயம் ஏற்பட்டது. உடனடியாக கோவிலில் இருந்த மருத்துவ மையத்தில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சிறுவனை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை