உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவில் தேர்நிலை சுவரையொட்டி குப்பை கொட்டியதற்காக காரமடை நகராட்சி சார்பில், தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாக அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு எதிரில் தேர்நிலை உள்ளது. இந்த தேர்நிலையை ஒட்டியுள்ள சுவர் அருகே நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உடைந்த கண்ணாடிகள், குப்பைகள், கழிவு துணிகள் போன்றவை கொட்டப்பட்டன. இதனை மருத்துவமனை ஊழியர்களே வந்து கொட்டியுள்ளனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் இங்கு கொட்டக்கூடாது என எச்சரித்தும் குப்பை கொட்டியுள்ளனர்.இதையடுத்து அங்கு வந்த காரமடை நகராட்சி சுகாதார துறையினர் குப்பை கொட்டிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை