புதுப்பொலிவுடன் மிளிரும் அரசு மேல்நிலைப்பள்ளி
கோவில்பாளையம்; எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,200 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 40 வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவருக்கு வர்ணம் பூச பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து எல்.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் பிரதர் நிறுவனத்தினர் ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 40 வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவருக்கு வர்ணம் தீட்டி தந்தனர்.இதையடுத்து, மாணவர்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரபாகரன், மனிதவள பொது மேலாளர் ரமேஷ் குமார், தலைமை ஆசிரியை விமலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி, பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.