உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் மடக்கிப்பிடித்தது அதிகாரிகள் குழு

தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் மடக்கிப்பிடித்தது அதிகாரிகள் குழு

கோவை: கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இணைந்து, தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.மோட்டார் வாகனச்சட்டங்களின்படி, 70 டெசிபலுக்கு குறைவான ஹாரன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான தனியார் பஸ்களில், 120 முதல் 180 டெசிபல் வரையிலான ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து இந்த ஏர்ஹாரன் சப்தத்தை கேட்கும் போது செவிப்பறை பாதிக்கப்படுகிறது.இது குறித்து அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து, நேற்று போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறையினர் இணைந்து, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பயன்படுத்தினால், டிரைவர் லைசென்ஸ் முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதுகுறித்து, கோவை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்( தெற்கு) துரைகண்ணன் கூறுகையில், '' எந்த பஸ்களிலும் ஏர்ஹாரன்களை நாங்கள் பொருத்துவதில்லை. டிரைவர்கள் டூட்டிக்கு வரும் போதே எடுத்து வருவார்கள் அல்லது டெர்மினல் பாயின்ட்டில் உள்ள கடைகளில், கொடுத்து வைத்திருப்பர். அங்கு வாங்கி மாட்டி, பயன்படுத்திவிட்டு திரும்பும் போது எடுத்து சென்றுவிடுவர். எச்சரித்தும் கேட்பதில்லை,'' என்றார்.கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் கூறுகையில், ''ஏர்ஹாரன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து, பலமுறை டிரைவர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் அறிவுரை கூறிவிட்டோம். என்ன சொன்னாலும் திருந்தாதவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறேன். விரைவில் கடுமையான நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை