- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 1,008வது ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி நேற்று காலை, 9:00 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், ராமானுஜர் உற்சவ மூர்த்திக்கு, இளநீர், பால், தேன், தயிர், திருமஞ்சன பொடி உள்ளிட்ட அபிேஷக பொருட்களை கொண்டு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் இன்று நடக்கிறது. உடுமலை
உடுமலை பிராமண சேவா சமிதி, 'உபாஸனா' மற்றும் ராம அய்யர் கல்யாண மண்டப அறக்கட்டளை சார்பில், முப்பெரும் ஜெயந்தி விழா நடந்தது.காலை, 7:00 மணி முதல் சங்கர, ராமானுஜ, மத்வ ஜெயந்தி ஆகிய முப்பெரும் ஜெயந்தி விழாவும், சமிதி உறுப்பினர்கள் மற்றும் உலக நலனுக்காக ஆவஹந்தி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம் மற்றும் ம்ருத்யுஞ்ச ஹோமமும் நடைபெற்றது.உடுமலை ராம அய்யர் கல்யாண மண்டபத்தில் நடந்த ேஹாமம் மற்றும் ஜெயந்தி விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.* ராமானுஜர் ஜெயந்தி விழாவையொட்டி, உடுமலை நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.ராமானுஜர் சுவாமிக்கு பன்னீர், பால் உட்பட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் ஜெயந்திவிழாவில் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.