உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 14 ஆண்டாக தலைமறைவான நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

14 ஆண்டாக தலைமறைவான நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கோவை;குற்ற வழக்கில், 14 ஆண்டாக தலைமறைவான நபரை, தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்துள்ளது.சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன்,54. இவர், கோவைபுதுாரில் 2001 ல், 'நேப் இன்போடெக்' என்ற பெயரில், டேட்டா சென்டர் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு இரு மடங்கு பணம் தருவதாக கூறி, 2000 க்கும் மேற்பட்டோரிடம், லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக, 2008ல் கைது செய்யப்பட்டார்.சி.பி.சி.ஐ.டி போலீசாரால், இவர் மீது, கோவை சி.ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஜாமினில் விடுவிக்கப்பட்ட பிரபாகரன், கோர்ட்டில் ஆஜராகாமல், 2010 முதல் தலைமறைவாக இருக்கிறார். இதனால், பிரபாகரனை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்துள்ளது. இவர் மீது, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் குற்றவழக்கு நிலுவையில் உள்ளது.இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை,கோவை மாவட்டம் என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம். 94981 84496 என்ற மொபைல் எண்ணிற்கும் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ