உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு வழங்க வேண்டும் கிராம சபையில் கோரிக்கை

வீடு வழங்க வேண்டும் கிராம சபையில் கோரிக்கை

அன்னுார்;'வீடு வழங்க வேண்டும்' என கிராம சபை கூட்டத்தில், மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில், ஆக. 9ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் அறிவுறுத்தினார். இதன்படி, அன்னுார் வட்டாரத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. முன்னதாக, 2016 முதல் 2022ம் ஆண்டு வரை பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட 35 வீடுகளை கள ஆய்வு செய்து தணிக்கையாளர் கனகராஜ் தலைமையிலான தணிக்கை குழு அறிக்கை தயாரித்திருந்தது. அந்த அறிக்கை கிராமசபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கூட்டத்திற்கு மூத்த உறுப்பினர் வீரபத்திர சாமி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் புஷ்பவதி முன்னிலை வகித்தார்.பொதுமக்கள் பேசுகையில்,'வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக தவிக்கிறோம். ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிக்கிறோம். எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு தெரிவிக்கிறோம் என ஊராட்சி நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்