உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் ஆய்வு கூட்டம்

கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் ஆய்வு கூட்டம்

கோவை, : கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.தமிழக தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று காலை கோவை வந்தார். அவருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மரியாதை அளித்தனர். பின், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறைக்கு செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.இதில், போலீசாருக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள், காலிப்பணியிடங்கள் எவ்வளவு இருக்கிறது?, என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கேட்டறிந்தார். அந்த வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஐ.ஜி., பவானீஸ்வரி, டி.ஐ.ஜி., சரவணசுந்தர், துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார், சுகாசினி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி