உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடத்தையில் சந்தேகப்பட்டு காதலியை  கொன்ற வாலிபர் சிறையில் அடைப்பு

நடத்தையில் சந்தேகப்பட்டு காதலியை  கொன்ற வாலிபர் சிறையில் அடைப்பு

கோவை: காதலியை கொலை செய்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி., புதுாரை சேர்ந்தவர் சரவணன், 29, பந்தல் அமைக்கும் பணி செய்து வந்தார். இவரது உறவினர் எஸ்.எஸ்., குளத்தை அடுத்த கள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கீதா, 26. இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் அண்ணன், தங்கை முறை என்பதால் அவர்களது காதலை பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்தனர். மேலும், அடிக்கடி ஓட்டலில் அறை எடுத்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். கடந்த, 13ம் தேதி இரவு சரவணன் வழக்கம் போல சின்னியம்பாளையம் பஸ் நிறுத்ததம் பகுதியில் உள்ள ஓட்டலில் கணவன் - மனைவி என கூறி அறை எடுத்தார். அதன் பின் கீதா அறைக்கு வந்தார். இருவரும் இரவு தங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு சரவணன் அறையில் இருந்து ஓடி வந்து ஓட்டல் பொறுப்பாளர் பாலாஜியிடம், கீதா கட்டிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து விட்டதாகவும், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.உடனே பாலாஜி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கீதாவை பரிசோதித்த போது அவர் இறந்து கிடந்தது தெரிந்தது. அந்த சமயத்தில் சரவணன் ஓட்டலில் இருந்து தப்பி சென்றார். இதையடுத்து பாலாஜி பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொட்டிப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சரவணனும், கீதாவும் நேற்று முன்தினம் இரவு அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது சரவணன், கீதாவிடம் அடிக்கடி யாரிடம் போனில் பேசி கொண்டு இருக்கிறாய் என நடத்தையில் சந்தேகப்பட்டு கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சரவணன், கீதாவை தாக்கி, தலையை பிடித்து சுவற்றில் அடித்துள்ளார். கீதா உயிரிழந்தது தெரியாமல் சரவணன் படுத்து துாங்கி உள்ளார்.,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி