உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாங்கரை அருகே காட்டு யானை உயிரிழப்பு

மாங்கரை அருகே காட்டு யானை உயிரிழப்பு

பெ.நா.பாளையம்:கோவை வனக்கோட்டம், கோவை வனச்சரகம், தடாகம் பிரிவு மாங்கரை வனப்பகுதியின் வெளியே சுமார், 150 மீட்டர் தொலைவில் மாங்கரை ஓடை பகுதியில், பெண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது.சம்பவ இடத்தில், ஆனைமலை புலிகள் காப்பகம் கால்நடை அலுவலர் மற்றும் ஆனைகட்டி, வடவள்ளி கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் இறந்து கிடந்த பெண் யானையின் உடற்கூறு ஆய்வு நடந்தது. இதில், இறந்த பெண் யானைக்கு சுமார், 38 வயது இருக்கக்கூடும் எனவும், நுரையீரல் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உள்ளுறுப்புகளின் செயல் இழப்பு இருப்பது தெரியவந்தது. வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. ஆய்வக முடிவுக்கு பின்னர் இறப்புக்கான முழுமையான காரணம் தெரிய வரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை