உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., இயக்கணும்

கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., இயக்கணும்

வால்பாறை:எஸ்டேட் பகுதியில், கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் கொண்டுவர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில் உள்ள 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு, மாதம் தோறும் 7 மற்றும் 10ம் தேதிகளில், அவர்களது வங்கிக்கணக்கில் சம்பளம் செலுத்தப்படுகிறது.மாதம் தோறும் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை எளிதில் பெற்றுச்செல்ல, நடமாடும் ஏ.டி.எம்.,வாகனம் இயக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில் வால்பாறை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம்., வாகனம் கொண்டுவரப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.இது குறித்து வால்பாறை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:வால்பாறை மலைப்பகுதியில், தேயிலை தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. கொடிய வனவிலங்குகளின் மத்தியில், உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வரும் நாங்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில், நகரில் உள்ள ஏ.டி.எமில் பணம் எடுக்க முடியாமல் தவிக்கிறோம்.விடுமுறை நாட்களில் சுற்றுலாபயணியரும் அதிக அளவில் வருவதால், வங்கி ஏ.டி.எம்., களில் பணம் எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.எனவே வால்பாறையில் இந்தியன் வங்கி, யூனியன் வங்கிகளின் சார்பில் கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்.,வாகனங்கள் எஸ்டேட் பகுதிக்கு இயக்க வேண்டும்.இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ