உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவுக்கு சங்கர், பெலிக்ஸ் வழக்கு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர், பெலிக்ஸ் வழக்கு ஒத்திவைப்பு

கோவை,:பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த வழக்கில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீதான குற்றச்சாட்டு பதிவு, கோர்ட்டில் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற 'யு டியூப்' சேனல் நடத்தி பிரபலமானவர். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற மற்றொரு 'யு யூடிப் ' சேனலுக்கு பேட்டி அளித்தபோது, பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்துக்களை தெரிவித்தார். புகாரின்படி, சவுக்கு சங்கர், யு டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை, கோவை சைபர் கிரைம் போலீசார், மே 4ல் கைது செய்தனர். இருவர் மீதும் கோவை, ஜே.எம்: 4, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக, நாளைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை