உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்பு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்பு ஒத்திவைப்பு

கோவை:பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த வழக்கில், சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்பு ஒத்திவைக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற 'யு டியூப்' சேனல் நடத்தி பிரபலமானவர். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற மற்றொரு 'யு யூடிப் ' சேனலுக்கு பேட்டி அளித்தபோது, பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். புகாரின் பேரில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் மே, 4 ல் அவரை கைது செய்தனர். கஞ்சா கடத்தல், மோசடி உட்பட மாநிலம் ழுழுவதும் மேலும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சங்கர் மீது, கோவை, ஜே.எம்:4, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டு குறித்து, கேள்வி கேட்க நேற்றைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மற்றொரு வழக்கில், சங்கரிடம் ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க, ஊட்டி மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்து இருந்ததால், கோவை கோர்ட்டில் நேற்று அவரை ஆஜர்படுத்தவில்லை. இதனால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ