உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சான்று பெற்ற விதை பயன்படுத்த அறிவுரை

சான்று பெற்ற விதை பயன்படுத்த அறிவுரை

அன்னுார்: சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த பயிற்சி வகுப்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பசூர், குப்பாயி அம்மன் கோவில் மண்டபத்தில், 'அட்மா' திட்டத்தின் கீழ் சான்று அளிக்கப்பட்ட விதைகளின் பயன்கள், விதை நேர்த்தி மற்றும் பயறு வகைகளின் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி வரவேற்றார்.வேளாண் உதவி இயக்குனர் பிந்து தலைமை வகித்து பேசுகையில்,''வேளாண்துறையில் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பெற்று பயன்பெறலாம்,'' என்றார். பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் மருதாசலம் பேசுகையில்,''சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் வாயிலாக 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். விதை நேர்த்தி செய்வதால் பயிர்களுக்கு நோய் பாதிப்பு குறையும். விதை அழுகல், நாற்று அழுகல் ஆகியவற்றிலிருந்து காக்கப்படும். முளைப்புத்திறன் மேம்படும்,'' என்றார்.வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கீதா பொறியியல் துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.வேளாண் அலுவலர் சுகன்யா பயறு வகைகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்து கூறினார்.உதவி வேளாண் அலுவலர் பூபாலன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை