உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர் பாதுகாப்பு முறை விவசாயிகளுக்கு அறிவுரை

பயிர் பாதுகாப்பு முறை விவசாயிகளுக்கு அறிவுரை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டாரத்தில் பொரியல் தட்டை விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை சார்பில் பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கியுள்ளனர்.கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில், தற்போது கோடை உழவு செய்து பொரியல் தட்டை மற்றும் சோளம் விதைப்பு துவங்கியுள்ளது. இதில், பூச்சிகள் மற்றும் நோய்கள்தாக்காத படி பயிர்பாதுகப்பு முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும், என, கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.பொரியல் தட்டையில் அசுவினி பூச்சி தாக்குதல் ஏற்படும். இதை கட்டுப்படுத்த, டைமெத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மற்றும் தட்டையில் சம்பல் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதை தவிர்க்க, ஒரு ஹெக்டேருக்கு, 25 கிலோ கந்தகம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில், 2 கிராம் நனையும் கந்தகம் தெளிக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை