உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதான் எலக் ஷன் முடிஞ்சு போச்சே... எம்.எல்.ஏ., ஆபீஸ் திறக்கலாமே

அதான் எலக் ஷன் முடிஞ்சு போச்சே... எம்.எல்.ஏ., ஆபீஸ் திறக்கலாமே

கோவை:மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கு, எம்.எல்.ஏ., அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று, எம்.எல்.ஏ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், எம்.எல்.ஏ., அலுவலகங்கள் பூட்டிக்கிடக்கின்றன. தொகுதி மக்கள், குறைகளை சொல்ல தவியாய் தவிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, மக்களை இப்படி தவிக்க விடுவது சரியல்ல என்கின்றனர் எம்.எல்.ஏ.,க்கள்.இது குறித்து, கோவை வடக்கு தொகுதி எம்.எல். ஏ., அம்மன் அர்ஜூனன் கூறியதாவது: எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டியிருப்பது மக்களுக்கு சிரமமாகத்தான் இருக்கிறது. தேர்தல் முடிந்து விட்டது. ஆனாலும் திறக்காமல் இருப்பது சரியல்ல. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிராந்திகுமாரிடம் எம்.எல்.ஏ.,அலுவலகம் திறக்கக்கோரி, மனு கொடுத்திருக்கிறேன்.குறைகளை சொல்ல, மக்கள் அ.தி.மு.க., அலுவலகத்துக்கும் எனது வீட்டுக்கும் வருகின்றனர். போனிலும் அழைக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் கூறியதாவது:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்க வாய்ப்புகள் இல்லை. கோவை தெற்கு தொகுதியிலுள்ள, 19 வார்டுகளுக்கும் ஒவ்வொரு வாட்ஸ் ஆப் குழுக்கள் ஏற்படுத்தி, வார்டுகளில் ஏற்படும் குறைகள் களையப்படுகின்றன. பெரிய பிரச்னையாக இருந்தால், போனில் தகவல் தெரிவிப்பர். இருப்பினும், தேர்தல் விதிமுறைகளை தளர்த்தி, எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ