உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்ற முன்னாள் மாணவர்கள்

பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்ற முன்னாள் மாணவர்கள்

கோவை : கோவை கணபதி பகுதியில் உள்ள சி.எம்.எஸ்., பள்ளியில், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 1992 மற்றும் 1994ம் ஆண்டுகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயின்ற 75 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள், பள்ளியின் செயலாளர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றனர்.30 ஆண்டுகளுக்குப் பின் நடந்த மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பில், மாணவர்கள் தங்களின் பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர். ஆசிரியர்களும் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்புகளுக்கு, சென்று இருக்கைகளில் அமர்ந்து கலந்துரையாடிமகிழ்ந்தனர்.ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். இப்போது பள்ளியில் பயிலும் நலிந்த மாணவர்களுக்கு, கல்வி கட்டண உதவி தொகை வழங்கப்பட்டது.இறுதியாக, அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு, பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை