மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
2 hour(s) ago
கோவை மாவட்டத்துக்கு புது டி.ஆர்.ஓ., நியமனம்
7 hour(s) ago
கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சிகள்
7 hour(s) ago
கோவை:பில்லுார் - 3 திட்டப்பணிகளை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக கூடுதல் செயலாளர் தாரா, நேற்று ஆய்வு செய்தார்.கோவை மாநகராட்சியில், குடிநீர் தேவைக்காக ரூ.780 கோடி மதிப்பில், பில்லுார் - 3 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, முருகையன் பரிசல்துறை பகுதியில், பில்லுார் - 3 குடிநீர் திட்டம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அதில், இயல்பு நீர் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு, துாய்மையான குடிநீர் குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. பிரதான குழாய், பன்னிமடை முதல் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள, ஆறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இத்திட்டம் செயல்படும் விதம் குறித்து, அம்ரூத் அமைச்சக கூடுதல் செயலாளர் தாரா, நேற்று ஆய்வு செய்தார். திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
2 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago