உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ் இலக்கியம் வாசிக்க அழைப்பு

தமிழ் இலக்கியம் வாசிக்க அழைப்பு

அன்னுார் : அன்னுார் பாரதி சிந்தனையாளர் பணி மையத்தின், 52வது ஆண்டு விழா அன்னூர் தாசபளஞ்சிக மண்டபத்தில் நடந்தது. அத்திக்கடவு வேலுநாச்சியார் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி தலைமை வகித்தார்.பேச்சாளர் உமா மகேஸ்வரி, 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்னும் தலைப்பில் பேசுகையில், ''உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் தமிழுக்கு தனி இடம் உண்டு. தமிழில் உள்ளது போல் இலக்கியங்கள் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டும். தமிழ் இலக்கியங்களை வாசிக்க மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.முன்னதாக, நாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது. சாதித்த மாணவ, மாணவியருக்கு, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், முன்னாள் தலைவர் சவுந்தரராஜன் பரிசு வழங்கினர்.பாரதியார் குறித்தும், பாரதி சிந்தனையாளர் பணி மையம் குறித்தும், பணி மையத்தின் செயலர் காளியப்பன், பொருளாளர் சண்முகம் உள்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை