உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி விண்ணப்பங்கள் வரவேற்பு

பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை : பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள் சார்பில், தாய் அல்லது தந்தை இழந்த பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி, விடுதி வசதியுடன் அளிக்கப்படவுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதன்படி, தாய் அல்லது தந்தை இழந்த பெண் குழந்தைகள், தாழ்த்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் ஆண்டு வருமானம், ஒருலட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். நான்காம் வகுப்பு முதல் பிளஸ்1 வரை இலவச கல்வி, விடுதி, உணவு அனைத்தும் அளிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 0422-2573350 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்களை வரும், 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ