மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
4 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
4 hour(s) ago
தேசிய நூலக வார விழா
4 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
4 hour(s) ago
கோவை:'தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, முதல்வர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். யானைகளால் மிதிபட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகள் எத்தனை பேர்; எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை முதல்வருக்கு ஏன் தெரிவிக்கவில்லை. யானைகள் முக்கியமா... விவசாயிகள் முக்கியமா... ' என, விவசாயிகள் காரசாரமாக கேள்வி எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை வனக்கோட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான கூட்டம், 10 ஆண்டுகளுக்கு பின், கோவையில் நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, உதவி வன பாதுகாவலர் விஜயகுமார், ரேஞ்சர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில், விவசாயிகள் பேசியதாவது:உங்களால் எங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியுமா. நடவடிக்கை எடுக்கப்படும் என ஒற்றை வரியில் பதில் சொல்வதால் என்ன பயன். மின் வேலி சட்டத்தில் முரண்பாடு இருக்கிறது; அவற்றை அப்படியே அமல்படுத்தக் கூடாது. மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மின்வேலியோ, கான்கிரீட் சுவரோ எழுப்பி, விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் வராமல் தடுக்க வேண்டும். விவசாயிகள் பக்கம் அரசு இருக்க வேண்டும். வன விலங்குகளால் விவசாயிகள் உயிரிழந்தால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சம் கொடுக்கும்போது, விவசாயி குடும்பத்துக்கு ஏன் கொடுக்கக் கூடாது?தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக, முதல்வருக்கு அறிக்கை கொடுத்தது யார்? துறை ரீதியாக கணக்கெடுத்து, அதிகாரிகள் கொடுத்த தகவல். யானைகளால் தாக்கப்பட்டு, மிதிபட்டு உயிரிழந்த விவசாயிகள் எத்தனை பேர், காயமடைந்தவர்கள் எத்தனை பேர், எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன என்கிற விபரத்தை முதல்வருக்கு, வனத்துறை அமைச்சருக்கு ஏன் கொடுக்கவில்லை. யானைகள் முக்கியமா... விவசாயிகள் முக்கியமா... இதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.யானைகள் தோட்டத்துக்கும், குடியிருப்புக்கும் வந்து விட்டதாக தகவல் சொன்னால், ஓட்டை ஜீப்பில் வனத்துறையில் உள்ள கீழ்மட்ட அலுவலர்களை அனுப்பி வைக்கிறீர்கள். உடன், பட்டாசு கொடுத்து அனுப்புகிறீர்கள். அவர்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு? உயரதிகாரிகள் யாராவது நேரில் வந்திருக்கிறீர்களா; ஏ.சி., அறைக்குள் இருந்து கொள்கிறீர்கள். முதலில் யானைகளுக்கு தீனி போடுங்கள். அவை வனத்தை விட்டு வராமல் தடுக்கப் பாருங்கள். ஏழை விவசாயிகளை காப்பாற்றுங்கள்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.விவசாயிகள் ஒவ்வொருவரும், வனத்துறை அதிகாரிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தினர். விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பம் மற்றும் காயமடைந்தோருக்கு இழப்பீடு வழங்கினால் போதுமா; அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுத்தீர்கள் என விவசாயிகள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். விவசாயிகளின் கோபத்தை தணிக்க முடியாமல், அதிகாரிகள் தடுமாறினர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் மல்லிகா கூறும்போது, ''உங்களது கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள். எங்களால் தீர்வு காண முடிந்தவற்றை தீர்த்து வைப்போம். சில விஷயங்களுக்கு அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். அதற்கு அரசுக்கு பரிந்துரைப்போம்,'' என்றார்.
கூட்டத்தில் விவசாயிகள் பலரும் கருத்து கூறினர். ஒரு மணி நேரமாகியும், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் வரவில்லை. ஆவேசமடைந்த விவசாயிகள், 'எங்களை வரவைத்து விட்டு, அவர் கூட்டத்துக்கு வரவில்லை. நாங்கள் சொல்லும் கருத்தை ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் விடுவதற்கா கூட்டம் நடத்துகிறீர்கள்' என கூறி, வெளிநடப்பு செய்ய முயன்றனர். இப்படி ஆளுக்கொரு விதமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் வந்த அவர், கூட்டத்தை வழிநடத்தினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago