உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

கோவை,;கோவை ஒண்டிப்புதுாரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில், வளர்ந்து வரும் இன்றைய நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப, மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம் நடந்தது.இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ரியோ பிசினஸ் சொலுாஷன் மேலாளர் டோனி ரொசாரியோ பேசுகையில், ''மாணவர்கள், உலகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் திறனை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான தொழில்நுட்ப திறன்களை, வளர்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் துறையின், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் குறித்து கற்றுக்கொள்ள, மாணவர்கள்தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,''என்றார்.கருத்தரங்கில், செயின்ட் ஜோசப் பள்ளியின், 150 மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ