உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அசத்திய அரசுப் பள்ளி மாணவி

அசத்திய அரசுப் பள்ளி மாணவி

கோவை;ராஜவீதி, துணி வணிகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சவுபாக்கியா நான்கு பாடங்களில் சென்டம் அடித்து 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.கோவையில் துணி வணிகர் மேல்நிலைப் பள்ளி மட்டுமே ஒன்றாம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பெண்களுக்கான அரசுப் பள்ளியாக செயல்படுகிறது. இங்கு 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இப்பள்ளியில் பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்திலும் ஆண்டுதோறும் முன்னிலை வகிக்கிறது. நேற்று வெளியான பிளஸ் 2 ரிசல்டில் கலைப் பாடப் பிரிவைச் சேர்ந்த மாணவி சவுபாக்கியா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், கணக்குப் பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாட்டியல், பொருளாதாரவியல் ஆகிய பாடங்களில் சென்டம் அடித்து அசத்தியுள்ளார்.இதுகுறித்து, மாணவி சவுபாக்கியா கூறுகையில், நான்கு பாடங்களில் சென்டம் அடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஓராண்டாக தொலைக்காட்சி மற்றும் மொபைல்போனை பயன்படுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி படித்தேன். மதிப்பெண் பெற உதவியாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பி.காம் பி.ஏ. துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கவுள்ளேன். குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது இலக்கு, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி