உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகலில் குறைந்தது வெப்பம் அதிகரித்தது காற்றின் ஈரப்பதம்

பகலில் குறைந்தது வெப்பம் அதிகரித்தது காற்றின் ஈரப்பதம்

கோவை;கோவையில் வரும் ஐந்து நாட்களுக்கு, லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பகல் நேர வெப்பநிலை குறைந்தும், காற்றின் ஈரப்பதம் அதிகரித்தும் காணப்படுகிறது.அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை, 31முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை கடந்த வாரம் இருந்த சூழலில், வரும் நாட்களில், 27-29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை, 22-24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.காலை நேர காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாகவும், மாலை நேரம் 50 சதவீதமாகவும் இருக்கும். காற்று சராசரியாக மணிக்கு, 16-18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். பெரும்பாலும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.மருந்து தெளிப்பினை காலை நேரங்களில், 3-4 மணி நேரம் மழையில்லாத வானிலை எதிர்பார்க்கப்படும் போது, மட்டும் மேற்கொள்ளலாம். எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி, வரும் பருவத்தில் நிலக்கடலை விதைக்க ஏதுவாக, நிலத்தை தயார்படுத்தலாம்.காற்றின் வேகம் அதிகம் என்பதால், வாழை மற்றும் கரும்பிற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பருவமழை கால திராட்சையில் காய்ந்த மற்றும் வளர்ச்சியில்லாத கிளைகளை கவாத்து செய்ய, இதுவே நல்ல தருணம் என, வேளாண் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை