உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிசியாவில் ஆட்டோ எக்ஸ்போ

கொடிசியாவில் ஆட்டோ எக்ஸ்போ

கோவை;யுனைடெட் டிரேட் பேர்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில், நான்காவது பதிப்பாக, 'இந்தியா ஆட்டோமேட்டிவ் மற்றும் கேரேஜ்' கண்காட்சி, அவிநாசி ரோடு, கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடக்கிறது. தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் மணி மற்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் மற்றும் இருசக்கர வாகன நலச்சங்க தலைவர்கள், கண்காட்சியை துவக்கி வைத்தனர்.80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. புதிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மின்சார வாகனங்கள், பழமையான வாகனங்கள், கார் வாஷ் இயந்திரங்கள், மோட்டார் வாகன பழுது பார்க்கும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.ஆட்டோமொபைல் தொழில் தொடங்க அல்லது புதிய வாகனம் வாங்க விரும்புவோருக்கு இக்கண்காட்சிமிக பயனுள்ளதாக இருக்கும். அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ