உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைக்கு அடிமையாகக் கூடாது மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போதைக்கு அடிமையாகக் கூடாது மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கோவை : கே.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.போதையில்லா பாரதம் அமைப்பதில் என் பங்கு நிச்சயம் என்பதை உணர்த்தும் விதமாக, மாணவ - மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிடப்பட்டது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) பவித்ராதேவி பேசுகையில், ''படிக்கும் பருவத்தில் தங்களுடைய பொறுப்பு உணர்ந்து, குழந்தைகள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் தரும் உணவு பொருட்களையோ, இதர பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது. போதை அளிக்கும் எந்த பொருட்களையும் உபயோகிக்கக் கூடாது. சிகரெட் புகையிலையோ அல்லது மென்று பயன்படுத்தக் கூடிய அளவில் உள்ள போதைப்பொருளோ, எந்தப் பொருளுக்கும் தங்களை அடிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. எப்போதும் போதைக்கு அடிமையாகக் கூடாது,'' என்றார்.'ஜி 18 அறக்கட்டளை' நிறுவனர் பார்த்திபன் வரவேற்றார். 'போதையின் பாதை' என்ற தலைப்பிலே டி.ஜே., வடிவமைப்பு கல்லுாரி பேராசிரியர் அரிகரசுதன் உரையாற்றினார். கோயம்புத்துார் காஸ்மோ பாலிடன் ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் தியாகராஜன், பரிசு வழங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு சதாசிவம், தாராபுரம் கலாராணி, மாநில ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ