உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆயுர்வேத மருத்துவ முகாம் ;வரும் 18ம் தேதி நடக்கிறது

ஆயுர்வேத மருத்துவ முகாம் ;வரும் 18ம் தேதி நடக்கிறது

கோவை;சேவாபாரதி சார்பில், இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் வரும், 18ம் தேதி ஆர்.எஸ். புரம், கிழக்கு வெங்கிடசாமி ரோட்டில் உள்ள, சத்குரு சேவாஸ்ரமத்தில் நடக்கிறது. காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை, ஏ.வி.பி., ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் இலவச மருந்துகள் வழங்குகின்றனர்.முகாமில், தண்டுவட வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, குதிங்கால் வலி, கீழ்வாதம், முடக்கு வாதம், தசை, எலும்பு வலி ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.முன்பதிவு அவசியம் என்பதால், 63803 73956, 99447 11983 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சேவா பாரதி மாநில கவுரவ தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி